9,10ம் வகுப்புக்கு தேர்வு.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!

 

9,10ம் வகுப்புக்கு தேர்வு.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான எஞ்சியிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கல்லூரிகளில் இறுதியாண்டைத் தவிர பிற ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதே போல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் பழனிசாமி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பினாலும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

9,10ம் வகுப்புக்கு தேர்வு.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!

இந்த ஆண்டு 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரவிக்கப்பட்ட நிலையில் தான், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவு பிறப்பித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

9,10ம் வகுப்புக்கு தேர்வு.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக பதில்களை பெற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுத வேண்டாம் என ஜாலியாக சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.