அடையாறில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ.... பயணிகள் அலறல்

 
அடையாறில் அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு 

அடையாறில் சென்னை மாநகர பேருந்து திடீரென சாலையிலே தீப்பற்றி எரிந்தது. 

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய சென்னை மாநகரப் பேருந்து 109 சி, அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தபோது  திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட (CNG) அரசு பேருந்து தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி, முற்றிலும் தீக்கிரையானது. புகை வந்ததும் பயணிகள் கீழே இறங்கியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.