மாணவியை ஏற்றாமல் சென்ற விவகாரம்....அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

 
bus

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறிய தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவியின் வீடியோ வைரலான நிலையில், ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார். திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தகோட்டை பகுதியில் நிற்காததால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பின் தொடர்ந்து ஓடி சென்று அரசு பேருந்தில் ஏறிச் சென்றார். இதனை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், இது வைரலானது. மேலும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்த நிலையில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிட நீக்கம் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய வீடியோ வைரலான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.