கவர்னர் தேநீர் விருந்து - மார்க்சிஸ்ட் கம்யூ. புறக்கணிப்பு..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் தேநீர் விருந்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கவர்னரின் அடாவடிப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவர்னர் நடத்தும் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணித்தே வருகிறது.
ராஜ்பவனை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஆலோசனையின் பேரில்தான் 'மக்கள் மாளிகை' என்று பெயர் மாற்றம் செய்ததாக பிரதமர் மோடியே அறிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே அமைந்திருக்கின்றது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா அபியான்' நிதியை இன்று வரை நிறுத்தியே வைத்திருக்கிறது. தமிழ்நாடு போராடி பெற்ற பல உரிமைகளையும், கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே அவருடைய செயல்பாடும், பேச்சுக்களும் அமைந்திருக்கின்றன.
எனவே, இந்த ஆண்டும் கவர்னர் தேநீர் விருந்திற்கு அழைத்துள்ளபோதும், அதை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


