ஆளுநரின் நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம்!!

 
tn

பாராளுமன்றத்தில் மோடி எதை செய்தாரோ அதைத்தான் பல்கலைக் கழகத்தில் இரவி செய்கிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

rn ravi

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், விடுதலை போராட்ட வீரர அன்புத்தோழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை ஏற்க மறுத்த  ஆளுநரின் நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம்.


விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுப்படுத்துவதோ,  கெளரவப்படுத்துவதோ இவர்களுக்கு உடன்பாடல்ல. பாராளுமன்றத்தில் மோடி எதை செய்தாரோ அதைத்தான் பல்கலைக் கழகத்தில் இரவி செய்கிறார்.

தேச விடுதலையை காட்டிக்கொடுத்தவர்கள்,அந்த வீர வரலாற்றை கண்டு நடுங்கத்தான் செய்வார்கள்.  என்று குறிப்பிட்டுள்ளார்.