அனைத்து குழந்தைகளையும் கொண்டாடுவோம் - தமிழிசை சௌந்தரராஜன்

 
tamilisai

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகள் நம் நாட்டின் கண்கள். அனைவருக்கும் என்னுடைய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த நாட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாக,மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ; எந்த நாட்டில் குழந்தைகளுக்கு படிப்பு கிடைக்கிறதோ அந்த நாடு முன்னேற்றம் அடைந்த நாடாக இருக்கும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பெண் குழந்தைகளின் கல்வி,முன்னேற்றம் அடையவும் பல திட்டங்களை கொண்டுவந்து உதவி வருகிறார்.  "எந்த நாட்டில் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு முன்னேறாது" என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். 


அனைத்து குழந்தைகளையும் சமமாக நினைத்து அவர்களை மகிழ்வித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளையும் கொண்டாடுவோம். இவ்வாரு குறிப்பிட்டுள்ளார்.