பரபரப்பான சூழ்நிலையில் விஜய்க்கு ஆளுநர் கடிதம்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்வது தொடர்பாக, ஆளுநர் ஆர்லேகர் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், துணை வேந்தர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார். துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். துணை வேந்தர் நியமனத்தில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனக் கூறியுள்ள ஆளுநர், துணை வேந்தர்கள் இல்லாததால் நிர்வாக பிரச்சனை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

