“சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாணவர்கள் கண்ணீர் விடுகின்றனர்”- ஆளுநர் ரவி

 
rn ravi

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் தியான மையத்தில் அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்றது. இந்த அகில இந்திய மகளிர் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

rn ravi


விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “பெண்களுடைய கஷ்டங்கள் ஆண்களுக்கு தெரியாது. ஆண்களுக்கு பெண்களுடைய கஷ்டங்கள் புரிவது கிடையாது. சுதந்திரத்திற்கு முன்பில் இருந்து பெண்களுடைய முன்னேற்றம் குறித்தும் பேசி வருகிறோம். சுதந்திரம் கிடைத்த பிறகும் பெண்களுக்கு உரிமைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பேசி வருகிறோம்.  தொடர்ந்து பேசி வருவதால் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவில் நிகழவில்லை. பெண்கள் நிச்சயம் கல்வி கற்க வேண்டும். கழிப்பிட வசதிகள் குறித்து தொடர்ந்து பேசி வந்தோம் அதனை அடிப்படையாகவே தற்போது அனைத்து இடங்களிலும் கழிப்பறைகள் தற்போது உள்ளன. இதேபோன்றுதான் தொடர்ந்து பேசி வரும்போது பெண்களுக்கான உரிமை கிடைக்கும். 


பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். பெண்கள் குறைந்த வசதிகளை வைத்து குடும்பத்தை நடத்துகிறார்கள். பெண்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சமமான மரியாதையும் அனைத்தையும் சரிசமமாக கொடுக்கின்றனர். அதேபோன்று அவர்கள் எங்கிருந்தாலும் அதுபோலதான் இருக்கும். அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் உரிய பங்கை தர வேண்டும். நான் ஒரு கல்லூரிக்கு  பட்டமளிக்கும் விழாவில், மாணவர்களை விட அதிக அளவு மாணவிகள் பட்டம் பெற்றனர். கோல்ட் மெடல் கொடுக்கும்பொழுது அங்கு அந்த கோல்ட் மெடல் வழங்கியவர்களில் ஆண்களை தேட வேண்டிய நிலை இருந்தது. 90% பெண்கள் தான் வெற்றி பெற்றிருந்தார்கள்.  கல்வி என்பது முகவரியாக உள்ளது. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக கல்வி இருந்து வருகிறது.

rn ravi

பெண்கள் கல்வி கற்றுவிட்டார்கள் என்றால், இருக்க கூடிய அடுத்த பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும் அது குறித்து நாம் பேச வேண்டும். பெண்கள் தற்போது பட்டம் பெற்று விட்டார்கள் , கோல்ட் மெடல் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய இடம் குறைவாகவே உள்ளது.  பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு கோல்டன் மெடல் வென்ற மாணவர்களிடம் பேசுவேன்  அப்போது பெண்கள் பலரும் கண்களில் தண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என கூறுவார்கள். சென்னையில் சென்று படிப்பது பாதுகாப்பு இல்லை என எங்கள் பெற்றோர்கள் கருதுவதாகவும், அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள். இதுதான் இருக்கக்கூடிய பிரச்சனை. நகரத்தை பாதுகாப்பான நகரமா மாற்ற வேண்டும் .நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். படித்த பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. கூட்டுக் குடும்பங்கள் இப்போது எங்கு இருக்கிறது என தெரியவில்லை. மேலைநாட்டு கலாச்சாரம் வேறு நம்முடைய கலாச்சாரங்கள் வேறு” என தெரிவித்தார்.