எங்கு பார்த்தாலும் மனுக்களுடன் மக்கள்! மாநில அரசு மீது அதிருப்தி- ஆளுநர் ரவி
அரசியல் அமைப்பு சாசனம் குறித்து பொய்யான தகவல் கூறப்படுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.
சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் 'மாளவியா' ஜெயந்தி விழா, பனாரஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இளைஞர்களுக்கான தேசம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அலகு தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மதன்மோகன் மாளவியா, வாஜ்பாய், இருவருமே வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்றியவர் வாஜ்பாய். சனாதனம் என்பது, அனைவரையிம் அரவணைப்பதாகும், அனைவரையும் ஒருங்கிணைப்பது, அனைவரும் ஒரு குடும்பமே. பாரதம், புவியியல் ரீதியிலானது அல்ல, பாரதம் புண்ணிய பூமி. பள்ளிகளில், வகுப்புகள் துவங்குவதற்கு முன் பிரேயர் நடக்கிறது. தர்மத்தை மாணவர்களிடம் போதிப்பதாக அது இடம்பெற வேண்டும்.ஒவ்வொருவரும் தங்களை பொறுப்புள்ளவர்களாக அது மாற்றச்செய்யும். அதெல்லாம் இப்போது இல்லை.
மக்கள், தங்களை நம்பியே, தங்களை எதிர்பார்த்தே இருக்க வேண்டும் என்ற நிலையை மாநில அரசுகள் ஏற்படுத்துகின்றன . எங்கு பார்த்தாலும் மனுக்களுடன் மக்கள் நிற்பதை பார்க்க முடிகிறது. மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மக்கள் தன்னம்பிக்கை யை இழந்து, பலவீனமடைகின்றனர். அவர்கள், தங்களது பொறுமைகளை இழக்கின்றனர். சோசலிசம் பற்றி பேசும் நாட்டில், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் ஏராளமான கிராமங்கள் இருந்தன. 2014 க்குப் பிறகுதான் மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் 2 கோடி பேர் மட்டுமே நேரடி வரி செலுத்தினர். இன்று 10 கோடிக்கும் அதிகமானோர் வரி் செலுத்துகின்றனர். இவர்கள் திடீரென வந்துவிடவில்லை. அரசு மீதான நம்பிக்கைதான் இதற்கு காரணம். அவர்களாகவே முன்வந்து வரி செலுத்துகின்றனர். பொருளாதாரத்தில் வலுவான நாடாக இந்தியா மாறி வருகிறது. வளர்ச்சி என்பது, அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த தாக, சமநிலையற்றதாக மாநிலங்களின் வளர்ச்சி் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில்தான் 25 கோடி மக்கள், வறுமை கோட்டில் இருந்து விடுபட்டுள்ளனர். 1.25 கோடி தமிழக மக்கள் முத்ரா லோன் பெற்றுள்ளனர். இந்த வகை லோனை பெற்று பல தொழில்களை பெண்கள் துவக்கி நடத்தி வருகின்றனர். முத்ரா லோன் பெற்று தங்க நகை தொழிலையும் நடத்தி வருகின்றனர். அரசியல் அமைப்பு சாசனம் குறித்து பொய்யான தகவல் கூறப்படுகிறது" என தெரிவித்தார்