சிவனையும், பெருமாளையும் வழிபடுவதில் அறிவியல் சிந்தனை இல்லையா?- ஆளுநர் ரவி

 
rn ravi rn ravi

பக்தி, அறிவியலுக்கு ஒப்பானது, சிவனையும் பெருமாளையும் வழிபடுவதில் அறிவியல் சிந்தனை இல்லையா? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rn ravi

தேவக்கோட்டையில் நடந்த சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மக்களை ஒன்றுபடுத்துவது ஆலயம் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அதை பிளவுபடுத்த எண்ணினர். கோயில் நிலங்களை பறித்துவிட்டால் ஆலயங்கள் பலவீனமாகும் என்று கருதினர் தமிழ்நாட்டைபோல எண்ணிலடங்கா சாதிகளை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பக்தி, அறிவியலுக்கு ஒப்பானது, சிவனையும் பெருமாளையும் வழிபடுவதில் அறிவியல் சிந்தனை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.


முன்னதாக தேவக்கோட்டை அருகே தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட இருந்தார். ஆனால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கண்டதேவி கோயில் குறித்த நூலை வெளியிடாமல் சென்றார்.