ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை- ஆளுநர் ரவி
ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற "ஸ்ரீராமரும் தமிழகமும் இணை பிரியா பந்தம்" என்ற புத்தக வெளியிட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “
நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும், நாட்டின் ஒவ்வொரு இஞ்ச் இடத்திலும் ராமர் இருக்கிறார். மக்கள் மனதில் இருந்து ராமரை நீக்க முடியாது. ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் உள்ளார். நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி ஸ்ரீராமர் தான்.
தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை. சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுகிறது. ராமர் வடநாட்டு கடவுள் என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டதால், இளைஞர்கள் நமது கலாசார, ஆன்மிக பாரம்பரியத்தை இழந்துள்ளனர்” என்றார்.