சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டால் தலித்துக்கள் மீது தாக்குதல்- ஆளுநர் ரவி

 
ச்

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Image

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்களின் சமூக நீதிக்கான அவரது கனவு, சமூக நீதிக்கான சத்தம் அதிகமாக கேட்கப்படும் தமிழ்நாட்டில் நிறைவேறாமல் போனது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலித்துகள் மீதான மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் பற்றிய செய்திகளை நாம் படிக்கிறோம். வறுமை காரணமாக அவர்களின் குழந்தைகள் மோசமான கற்பித்தல் தரத்துக்கும் கற்றலுக்கும் பெயர் பெற்ற மாநில அரசு  பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு நல்ல கல்வியும் கண்ணியமான எதிர்காலமும் எவ்வாறு கிடைக்காமல் போகிறது

தலித் சகோதர, சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்ற பாபாசாகேப்பின் கனவை நிறைவேற்றுவதில் இருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதை நேர்மையாக சுயபரிசோதனை செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாஃபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது. சமூகநீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்தில் சென்றதாகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.