பொங்கல் பண்டிகை - தமிழ்நாடு ஆளுநர், ஓபிஎஸ் வாழ்த்து

 
tn

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலோ மரியாதை செலுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி, தமிழக மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.