இல.கணேசனின் உடலுக்கு ஆளுநர் ரவி அஞ்சலி
Aug 15, 2025, 22:32 IST1755277336324
மறைந்த பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசனின் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இல கணேசனின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்திய பின் இல.கணேசன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதேபோல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் நாளை (ஆக.16) மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது

