தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

 
 ஆளுநர் ரவி  ஆளுநர் ரவி

தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட  மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Image

தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட  மசோதாவை அப்போதைய வனத்துறை அமைச்சர் க.பொன்முடி சட்டப்பேரவையில் கடந்த ஜன.11  தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா அன்றைய தினமே பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி வன நிலங்களை வனமற்ற நோக்கத்திற்காக வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் போது எல்லாம் அந்த பயனாளர் முகமை காடு வளர்ப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட அளவிலான நிலத்தை வழங்க வேண்டும். இதேபோல் வனப் பரப்பளவை அதிகப்படுத்திட வனம் அல்லாத  நிலங்களை வனமாக அறிவித்திடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.