#BREAKING செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஆளுநர் அனுமதி!

 
செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஆளுநர் அர்லேகர் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் அஇஅதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.      பொது ஊழியராக இருந்தவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக, அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு, முதல்வர் ஜோசப் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு முறைப்படி கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஆளுநர் அர்லேகர் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் அவர் மீது ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் உள்ளன.