மகாத்மா காந்தியின் நினைவு தினம் - ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை

 
gandhi

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 77-வது நினைவு நாளையொட்டி அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 77-வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (30.1.2024) சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.மூர்த்தி, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், ஆளுநரின் செயலாளர் திரு.இரா. கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.