சம்பந்தமே இல்லாத துறைக்கு மாற்றும் தவெக அரசு- குழப்பத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள்

 
assembly

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலராக அலர்மேல்மங்கை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலராக அலர்மேல்மங்கை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மாசு கட்டுப்பாடு வாரியத்திலேயே பணியாற்றிய துறை சார் நிபுணத்துவம் பெற்ற  மூத்த அதிகாரிகள் வகித்து வந்த பொறுப்பு சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவமில்லாத ஐஏஎஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பொறுப்புக்கு நியமனம் செய்யப்படுவர்கள் குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் Member Secretary பதவிக்கு தற்போது ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக இந்தியா முழுவதும் இந்த பதவிக்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் IFS-யை தான் நியமிப்பது வழக்கம். சில மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமிப்பதுண்டு.  பெரும்பாலும் இந்த துறையின் சீனியர் இன்ஜினியர்களே Member Secretary-வாக நியமிக்கப்படுவார்கள். இதற்கு உதாரணமாக, ராஜஸ்தான் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இதே பொறுப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான விஜய் IFS அவர்கள் குறிப்பிட்ட காலம் பணியாற்றியுள்ளார்.