543 மருந்துகளின் விலையை குறைத்த மத்திய அரசு! ரூ.40,000 மருந்து இனி வெறும் ரூ.2,720 மட்டுமே..!
இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. இதனால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 137 வகையான மொத்தம் 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த விலைக்குறைப்பால் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பல்போசிலெப் (மார்பக புற்றுநோய் மருந்து): பழைய விலை ரூ. 40,421 - புதிய விலை ரூ. 2,720
தொடிபா (கீமோதெரபி ஊசி - 100 எம்ஜி): பழைய விலை ரூ. 80,072 - புதிய விலை ரூ. 7,150
பிரிடுசொம்பா (புற்றுநோய் ஊசி - 420 எம்ஜி): பழைய விலை ரூ. 94,951 - புதிய விலை ரூ. 30,593
பிவாசிசுமாப் (புற்றுநோய் ஊசி - 400 எம்ஜி): பழைய விலை ரூ. 69,852 - புதிய விலை ரூ. 13,512
அபிரெட்ரோனி (புரோஸ்டேட் - 120 மாத்திரைகள்): பழைய விலை ரூ. 28,000 - புதிய விலை ரூ. 4,840
டசடினிப் (லுகேமியா/ இரத்த புற்றுநோய்): பழைய விலை ரூ. 17,811 - புதிய விலை ரூ. 1,808
இதேபோல் ஒட்டுமொத்தமாக புற்றுநோய் தொடர்பான 543 மருந்துகளின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

