12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை - இதோ முக்கிய அறிவிப்பு!!

 
money

அரசின் கல்வி ஊக்கத்தொகையை வழங்குவதற்காக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை என்பது வழங்கப்படும் . இது  பள்ளி இடைநிற்றலை தவிர்க்க உறுதுணையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500 ரூபாயும்,  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 2,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

school

கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 5.13 லட்சம் மாணவ - மாணவியருக்கு உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவ - மாணவியரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதற்காக முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.  இதில் 2.5 லட்சம் மாணவ - மாணவியர் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை முறையாக  பள்ளிகளில் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

school

இதன் காரணமாக வருகிற 25-ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவியரின் விவரங்களை பட்டியலாக தயாரித்து,  அவர்களின் வங்கிக் கணக்குகளை சரியாக குறிப்பிட்டு பள்ளி கல்வித்துறையின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குநருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.  மாணவ - மாணவியரின் விவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தர வேண்டிய தொகை,  அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.