மத்திய அரசின் பாரத் டாக்ஸி சேவை அறிமுகம்..!! இனி மலிவு விலையில் பயணிக்கலாம்..!

 
1 1

மத்திய அரசு அரசாங்கத்தால் நடத்தப்படும் நாட்டின் முதல் அரசு டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ செயலி கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் (Apple App Store) ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த செயலி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. இது நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளை தான் நம்பி இருக்கிறோம்.தனியார் நிறுவன செயலிகள் பீக் அவர்களிலும் , டிமாண்டிற்கு ஏற்ற வகையிலும் கட்டணத்தை உயர்த்துகின்றன. இதனால் பீக் அவர்களில் டாக்ஸியில் செல்ல வேண்டும் என்றால் நாம் மற்ற சமயங்களை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இது போக சில சமயங்களில் ஓட்டுநர்களும் அதில் காட்டும் தொகையை விட கூடுதலாக நம்மிடம் வசூல் செய்கிறார்கள்.


இந்த டாக்ஸி சேவையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒரே மாதிரியான கட்டண விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தான் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஒரு நிவாரணம் கிடைக்க இருக்கிறது. மத்திய அரசு சார்பாக நாடு முழுவதும் பாரத் டாக்ஸி என்ற சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


கூட்டுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மின்ஆட்சி பிரிவு (NeGD) இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சேவை, ஓட்டுநர்களுக்குப் பங்குதாரர் என்ற உரிமையையும், 100 சதவீத வருமானத்தையும் வழங்குகிறது.


அதேபோல, பயணிகளுக்கு நியாயமான, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் நம்பகமான சேவையும் பாரத் டாக்சி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. DIGILOCKER, UMANG போன்ற தேசிய தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பாரத் டாக்சி, வரும் நவம்பரில் டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் 20 நகரங்களில் விரிவடையவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் கூட்டுறவு உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும் சேர முடியும். தனியார் நிறுவனங்களைப் போலப் பெரிய அளவில் கட்டண விகிதம் பெறப்படமாட்டாது என்பதால், ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து எந்தவித கமிஷனையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பாரத் டாக்சி சேவையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதிக தேவை காலங்களிலும் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்பதாலும், பயணிகள் மத்தியில் இது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டெல்லியில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தில் சாரதி என்ற பெயரில் முதற்கட்டமாக, 5 ஆயிரம் ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் இணைக்கப்படவுள்ளனர். அடுத்தகட்டமாக மும்பை, புனே, போபால், லக்னோ, ஜெய்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன செயலிகளை போல ஓட்டுநர்கள் இதில் ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் மாதந்தோறும் ஒரு சந்தா தொகையை செலுத்திவிட்டு பாரத் டாக்ஸி செயலியில் இணைந்து கொள்ளலாம். செயலியில் வரக்கூடிய ரைடுகளில் வாடிக்கையாளர் செலுத்தக்கூடிய முழு தொகையும் ஓட்டுநர்களுக்கே செல்லும். எனவே ஓட்டுநர்களுக்கு இது லாபம்.

ஒரு லட்சம் ஓட்டுனர்களை இதில் இணைக்கவும் முடிவு செய்து இருக்கின்றனர். இது ஒரு கூட்டுறவு அமைப்பாக செயல்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பாரத் டாக்ஸி சேவையில் ரெண்டல் , லோக்கல் ட்ரான்ஸ்ஃபர், அவுட் ஸ்டேஷன் என மூன்று சேவைகளை பெறலாம்.

Bharat Taxi App

  • பாரத் டாக்ஸி செயலியைப் பயன்படுத்த, பயனர்கள் முதலில் செயலியைப் பதிவிறக்கம் செய்து ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.
  • பயனர்கள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பாரத் டாக்ஸி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில் "Sign up" என்பதை டேப் செய்து, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • செயலியில் லாக் இன் செய்த பிறகு, நீங்கள் டாக்ஸி முன்பதிவு செய்யத் தொடங்கலாம். தற்போது சேவைகள் குறைவாக இருந்தாலும், முன்பதிவு செய்வது எளிது.
  • முகப்புப் பக்கத்தில், மூன்று விருப்பங்கள் காணப்படும். Rentals ஆப்ஷன் 8 மணிநேரம் வரை ஒரு காரை வாடகைக்கு எடுக்க உங்களை அனுமதிக்கிறது. Outstation ஆப்ஷன் நகரத்திற்கு வெளியே பயணிக்க உங்களை அனுமதிக்கிறது.
  •  அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க, Local Transfer டேபை கிளிக் செய்யவும். இது தற்போது விமான நிலைய பிக்அப் அல்லது விமான நிலைய டிராப்-ஆஃப் ஆகியவற்றை வழங்குகிறது. Local Transfer டேபில், உங்கள் பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • செல்ல வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, சர்ச் என்பதைத் டேப் செய்யவும். கிடைக்கக்கூடிய வாகனங்களின் பட்டியல் தோன்றும்போது, ​​உங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர், Confirm Booking என்பதை டேப் செய்யவும். கட்டணத் தகவலை மதிப்பாய்வு செய்த பிறகு, Next என்பதைத் டே செய்து, பின்னர் Book Now என்பதை டேப் செய்து முன்பதிவை உறுதிபடுத்தவும்.
  • ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு ரைடை ரத்து செய்ய வேண்டுமானால், செயல்பாட்டின் கீழே உள்ள My Rides -ஐ டேப் செய்யவும். இங்கே, உங்கள் முன்பதிவுக்கு அடுத்துள்ள Pending ஆப்ஷனை டேப் செய்யவும். அங்கு Cancel Ride ஆப்ஷன் இருக்கும். ரத்து செய்வதற்கான காரணத்தை உள்ளிட்டு, பயணத்தை ரத்து செய்ய Ok என்பதை டேப் செய்யவும்.