#BREAKING அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்!
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலியாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாளையே சம்பளத்தை வரவுவைக்க நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலியாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாளையே சம்பளத்தை வரவுவைக்க மத்திய நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் வங்கிகள் தொடர் ஸ்டிரைக் எதிரொலியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளையே சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25-ம் தேதியே இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாள்கள் வேலை போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

