மது, கனிம விற்பனையில் அரசுக்கு ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய்
நான்கு மாதங்களில் மது மற்றும் கனிம விற்பனையில் அரசுக்கு ₹2,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், த.வெ.க., அரசு அமைந்த பின், மது விற்பனையில் முறைகேட்டை தடுத்து, கூடுதல் வருவாய் ஈட்ட, 'டாஸ்மாக்' நிறுவனம் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு மதுவகை, பீர், ஒயின் பெட்டிக்கு, 90 ரூபாய், 40 ரூபாய், 20 ரூபாய் என, மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் சிறப்பு கட்டணம் வசூலிக்க, ஜூனில் உத்தரவிடப்பட்டது. தனியார், 'கிளப்'களில் மதுக்கூடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. கனிமங்கள் விற்பனையிலும் முறைகேடுகள் தடுக்கப்பட்டன. இதுபோன்ற காரணங்களால், கடந்த நான்கு மாதங்களில், அரசுக்கு, 2,500 கோடி ரூபாய், கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் மது மற்றும் கனிமங்கள் விற்பனையில், அரசுக்கு வர வேண்டிய வருவாய், தனியாருக்கு சென்றது. இதனால், அரசுக்கு வரு வாய்இழப்பு ஏற்பட்டது.கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு துறையில் இருந்தும், அரசுக்கு வர வேண்டிய வருவாய், அப்படியே அரசு கஜானாவுக்கு வருவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றால், கடந்த நான்கு மாதங்களில், அரசுக்கு, 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதில், மது வகைகள் வாயிலாக மட்டும், 200 கோடி ரூபாய்க்கு மேல், கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து துறைகளிலும், இந்த முழு ஆண்டில், 20,000 கோடி ரூபாய்க்கு மேலாக கூடுதல் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

