தவெக கொடி நிறங்களுக்கு மாறும் அரசுப் பேருந்துகள்
புதிதாக தயார் செய்யப்படும் தமிழக அரசின் மினி பேருந்துகள் தவெக கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறங்களில் தயாராகி வருகிறது.
தமிழக அரசின் மினி பேருந்துகள், தவெக (TVK) கட்சியின் கொடி நிறங்களில் தயார் செய்யப்படுகின்றன. முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிடித்தது மஞ்சள் கலர். ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்தது பச்சை கலர். தற்போது முதல்வர் விஜய்க்கு பிடித்தது மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த கலர். தற்போது அனைத்து அரசு பேருந்துகளும் மஞ்சள் நிறத்துக்கு தான் மாறி வருகிறது. இனி தமிழக வெற்றி கழக ஆட்சியில் அனைத்துமே மஞ்சள் மற்றும் சிவப்புக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என எக்ஸ் தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்துக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

