தவெக கட்சிக் கொடி நிறத்தில் அரசுப் பேருந்து- “அவன் அப்பன் வீட்டு காசா?” என திமுக காட்டம்
பல்வேறு நவீன அம்சங்களுடன் த.வெ.க கட்சிக்கொடி நிறத்தில் சேலத்தில் 26 நகரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டன.
த.வெ.க கட்சிக்கொடி நிறத்தில் அரசுப் பேருந்து வாங்க இது என்ன அவன் அப்பன் வீட்டு காசா?
— DMK IT WING (@DMKITwing) September 24, 2026
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க, தொட்டால் விடமாட்டேன் என டயலாக் பேசிவிட்டு, அரசுப் பேருந்தில் மக்கள் வரிப்பணத்தில் த.வெ.க கட்சிக்கொடி நிறத்தைப் பூசும் பொழுது அந்த வாய்க்கு பல் கூசவில்லை… pic.twitter.com/tg7Rkq4mmC
சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய மாநகர பேருந்துகள், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது சுங்கக்கட்டணம் கட்டணம் இல்லாமல் செல்ல வேண்டுமென ஓட்டுநர்கள் கூறியதால் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 26 நகர பேருந்துகள் மாற்றப்பட்டு பிஎஸ் 6 வகையைச் சேர்ந்த புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேருந்து கலர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, “த.வெ.க கட்சிக்கொடி நிறத்தில் அரசுப் பேருந்து வாங்க இது என்ன அவன் அப்பன் வீட்டு காசா? ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க, தொட்டால் விடமாட்டேன் என டயலாக் பேசிவிட்டு, அரசுப் பேருந்தில் மக்கள் வரிப்பணத்தில் த.வெ.க கட்சிக்கொடி நிறத்தைப் பூசும் பொழுது அந்த வாய்க்கு பல் கூசவில்லை யா? ஆணவம் அழிவிற்கு வழி!” என சாடியுள்ளது.

