நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து- பதறிய பயணிகள்

 
ச்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) திருநெல்வேலி கோட்டத்தின் கீழ் மொத்தம் 1,773 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இக்கோட்டத்தின் கீழ் மொத்தம் 30 பணிமனைகள் செயல்படுகின்றன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Image

இப்பேருந்துகள் தினமும் சுமார் 7.32 லட்சம் கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு, சுமார் 14.44 லட்சம் பயணிகள் வரை தங்களின் பயணங்களுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலான பேருந்துகளில் பிரேக் பழுது, இன்ஜின் வெப்பமடைதல் மற்றும் டயர் வெடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன: திருநெல்வேலி கோட்டத்தில் பல வழித்தடங்களில் தரம் குறைந்த மற்றும் காலாவதியான பழைய பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பணிமனைகளில் (Depots) முறையான தினசரி பராமரிப்பு மற்றும் தரமான உதிரிபாகங்கள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனாலே நடுரோட்டில் அடிக்கடி பேருந்துகள்  பழுதாகி நிற்பது தொடர காலியாகி வருகிறது அதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை  ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத இன்ஜினியிலிருந்து திடீரென புகை வெளியேறி தீப்பிடித்துஎரிந்தது. இதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போக்குவரத்து துறை நிர்வாக அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.