அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து- ஆட்டோ ஓட்டுநர் பலி

புளியங்குடி அருகே பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோவும் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று வழக்கம் போல புளியங்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்து கொண்டு சிந்தாமணி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்திப்பு அருகே ஆட்டோவும் மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுக்கு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்செல்வகுமார் படுகாயங்களுடன் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். அதே ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பள்ளிக் குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவி உயற் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் உடல் புளியங்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.