முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து
Mar 1, 2025, 12:35 IST1740812717287

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் கையெழுத்து' போட்டு வாழ்த்து செய்தியை அனுப்பினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தாங்கள் இன்று 72ஆவது தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.