சாலையில் உருண்டோடிய பேருந்து சக்கரம்! பயணிகள் அதிர்ச்சி

சீர்காழி அருகே சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் - உயிர் தப்பிய பயணிகள் சாதுரியமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம் கிராமத்திற்கு கிராம மக்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என அனைத்து அன்றாட தேவைகளுக்கும் அருகில் உள்ள சீர்காழி நகரத்தையை சார்ந்து உள்ளனர். அப்பகுதி மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரசு பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,
இந்நிலையில் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற அரசு பேருந்து, சுமார் 60 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது பனங்காட்டான்குடி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் வலது புற முன் சக்கர கழண்டு பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடி உள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தினார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது தற்போது சாலையில் பேருந்து சக்கரம் அச்சு முறித்து பேருந்தை நகர்த்த முடியாமல் நிற்கிறது