மக்கள் தேடிய புதிய முகம் கிடைத்தது: இனி நல்லாட்சி உறுதி - செங்கோட்டையன்..!

 
1 1

தவெகெ தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது.. அங்கே கொடி அசைத்து கொண்டிருக்கிறார்கள்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றார்.. ஆனால் இப்போது பிள்ளையார் சுழி போடவில்லை.. வேறு சுழி போடப்பட்டிருக்கிறது. எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள். ஆனால் மக்களின் சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைப்பார்கள். மக்கள் சக்திக்கு யாராலும் தடை போட முடியாது. இந்த கிராமத்தில் கூடிய கூட்டம் போல், விஜய்க்கு ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டம் கூடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரை விஜய்க்கு வாக்கு போட சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளே தான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா?

ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள்.. அந்த முகம் கிடைத்துவிட்டது.. என்னை யாராலும் சாய்த்துவிட முடியாது.. சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்து போவார்கள்.. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்.. மிக விரைவிலேயே தவெகவுக்கு சின்னம் கிடைக்கப் போகிறது. அது எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால் வெளியில் சொல்லக் கூடாது.. அந்த சின்னத்தை பார்த்த பிறகு தான் நாடே வியப்படைய போகிறது.. அஞ்சப் போகிறது.. ஏனென்றால் இந்த சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் முடியாது” என்று கூறினார்.