பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மீது பாய்ந்த குண்டாஸ்!!

 
tt

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

t

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யா காலில் சுடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து தோட்டாக்களும் , கை துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ்  சுதாகர் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அலெக்சிஸ்  சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

gundas

இந்நிலையில்  மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.