இனி மது கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: எஸ்.பி. எச்சரிக்கை..!

 
1

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர். 

குற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய எஸ்.பி. ஜெயக்குமார், மதுபானம் கடத்துவோரும், விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் தெரிவித்தார். 

மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனங்களை முறையாக சோதனை செய்து, சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.