அயோத்தி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!

 
1

உ.பி மாநிலம் அயோத்தி சந்திப்பு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மார்ச் 18 அன்று, சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் நான்கு பெட்டிகள் அஜ்மீர் நிலையம் அருகே தடம் புரண்டன.