தங்கம் வாங்க நல்ல நேரம்: சவரனுக்கு ரூ.1,200 வரை அதிரடியாக குறைந்தது..!!
சர்வதேச சந்தையில் நிலவி வருகிற பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் தங்கம் விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம், டாலர் மதிப்பு, போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளும் தங்கம் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தங்கம் விலை அவ்வபோது சிறிய அளவில் ஏற்றம் கண்டாலும், பெரும்பாலும் குறைந்து வருகிறது.
நேற்று (அக்டோபர் 21) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.230-க்கு விற்பனையானது.
இன்று (அக்டோபர் 22) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.225-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,25,000-க்கு விற்பனையாகிறது.

