குட் நியூஸ்: விரைவில் பூந்தமல்லி - வடபழனி இடையே ரயில் சேவை..!

 
Tunneling works commenced for Chennai Metro Phase 2 Corridors

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 15.8 கி.மீ உயர்மட்டப் பாதையில் சேவையைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்ல சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால், இந்தப் பயணம் வெறும் 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்துவிடும்.

இணைப்பு வசதி: வடபழனி நிலையத்தில் இறங்கும் பயணிகள், அங்கிருந்து ஒரு 'ஸ்கைவாக்' (Skywalk) வழியாக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முதற்கட்ட மெட்ரோ நிலையத்திற்கு (சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடம்) எளிதாக மாறிச் செல்ல முடியும்.

ஆரம்பகட்டத்தில் ரயில்கள் அனைத்து நிலையங்களிலும் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிற்கும் நிலையங்கள்:

பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத் தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி.

தற்காலிகமாக தவிர்க்கப்படும் நிலையங்கள்:

ஆலப்பாக்கம், கரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு மற்றும் சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களில் இன்னும் சில கட்டுமானப் பணிகள் (நுழைவு/வெளியேறும் பகுதிகள்) நடைபெற்று வருவதால், இந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் செல்லும். இப்பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.