காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தங்கம்... இன்று அதிரடியாக விலை குறைந்தது..!!
Mar 24, 2026, 09:54 IST1774326261882
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது.. நேற்று கூட தங்கம் விலைசவரனுக்கு 7600 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது...
ஆனால் அமெரிக்கா அதிபர் டிரம்ப் 5 நாள் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் தங்கம் விலை 5360 உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது...
இன்று மீண்டும் தங்கம் விலை உயரும் என பயத்தில் இருந்த மக்களுக்கு நற்செய்தி வந்துள்ளது.
தங்கம் விலை நேற்று (மார்.23) ஒரே நாளில் 3 முறை மற்றம் கண்டு ஒரு சவரன் ரூ.1,06,720க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 24) தங்கம் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

