காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தங்கம்..! தங்கம் விலை மளமளவென குறைந்தது..!
Oct 30, 2025, 09:49 IST1761797970967
மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுவது தங்கம். இதன் காரணமாகவே, மொத்தமாக நகை வாங்க முடியாதவர்கள் கூட, பணத்தை சிறுக சிறுக சேமித்து தங்களால் இயன்ற தங்கத்தை வாங்குகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வகையில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, தீபாவளிக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் மக்கள் மீண்டும் தங்கம் வாங்கலாம் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு ஒரேநாளில் 2-முறை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், சவரன் ரூ.90,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1800 குறைந்து ₹88,800-க்கும், கிராமுக்கு ₹225 குறைந்து ₹11,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 165-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


