காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தங்கம்..! சவரனுக்கு ரூ.1,840 அதிரடியாக குறைந்தது..!!

 
Gold

தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. ஜூன் 1-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து, ரூ. 1,16,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 130 குறைந்து ரூ. 14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஜூன் 3 வரை தொடர்ந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது.

நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600க்கு விற்கப்படுகிறது.

அதே போல ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,430க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.230 குறைந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.270க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000க்கு விற்கப்படுகிறது