காலையிலேயே வந்த குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்தது

 
Gold
தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு முழுக்க பெரும்பாலான நாட்களில் ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் குறைவதும் அவ்வபோது அதிகரிப்பதுமாக இருக்கிறது.
பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்பட்டாலும், உலகளவிலான பொருளாதார நிச்சயமற்ற தன்மையை கருத்தில்கொண்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதலீடுகளின் பக்கமே பெரும்பாலான முதலீட்டாளர்கள் செல்கின்றனர்.
அதன்படி, தற்போது உலக சந்தையில் டாலர் மதிப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே போவதால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் காரணமாக, தங்கம் விலை பெரும்பாலான நாட்களில் குறைவதும், சில நேரங்களில் ஏறுவதுமாக இருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று (மே 04) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,820க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.