காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தங்கம்..!! இன்று தங்கம் விலை குறைந்தது.. !
தங்கம் விலை தொடர்ந்து விலை சரிந்து வருகிறதே.. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிணால், விலை மேலும் சரியுமா? அப்போது நகை வாங்கலாம் என திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.
காலையில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம், பிற்பகலில் அதேபோல் கிராமுக்கு ரூ.100-ம், சவரன் ரூ.800-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ. 92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173க்கும், கிலோவுக்கு ரூ.3000 குறைந்து, ரூ.1,73,000க்கும் விற்பனையாகிறது.


