காலையிலேயே வந்த குட் நியூஸ்..!!தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது..!!

 
Gold

ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கடுமையாக விலை உயர்ந்து, ஆண்டு இறுதியில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதனால் இந்த ஆண்டு பாதிக்குள் தங்கம் விலை ரூ. 2 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மூண்ட அமெரிக்கா - ஈரான் போரால் எதிர்பாராத சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 4 ஆயிரம் டாலருக்கும் கீழ் குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் முந்தைய நாளின் விலையிலேயே நீடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.