காலையிலேயே வந்த குட் நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைவு..!!
அமெரிக்கா - ஈரான் போர் முடிவுற்ற நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இருப்பினும், உலக சந்தையில் பொருளாதார நிலை சரியாகும் வரை தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
எனினும், இந்த குறுகிய கால விலை சரிவு எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும் என்று கணிக்க முடியாது என்றும், அதுவே விலை ஏற தொடங்கினால் கணிசமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் நகை வாங்குவதற்கு உகந்த நேரமா? இப்போது பெரிய அளவில் முதலீடு செய்யலாமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது
.தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) மேலும் ரூ.1,680 அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக ஒரு கிராம் ரூ.13,600-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.108,800-க்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று ஒரு கிராமுக்குரூ.40 குறைந்து ரூ.13,560-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.108,480-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ.106,800-க்கும் விற்பனையாகிறது.

