வார கடைசியில் வந்த குட் நியூஸ்..!! இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது..!!
மேற்காசிய போரால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்பு படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருநாடுகளிடையே திரும்பவும் போர் மூண்டிருப்பதால் தற்போது தங்கம் நிலை ஏறுமா அல்லது இறங்குமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.
நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,350-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.245-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 11) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.
2025-ம் ஆண்டு இதே ஜூலை 11-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,600-க்கும், 1 கிராம் ரூ.9,075-க்கும் விற்பனையானது.

