தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..! தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல..!

 
election commision

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அன்று காலை 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள், முன்பு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் மட்டும் வெளியானது. இம்முறை, தேர்தல் கமிஷனின் 'ECINET' என்ற மொபைல் செயலி யிலும், முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாநில வாரியாக, தொகுதிகள் வாரியாக, உடனுக்குடன் முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட உள்ளன. மொபைல் செயலியில், மாநில, மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம் ஏற்கனவே வெளியிடப்பட்டது.