பெண் பணியாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு..!

 
1

மகளிர் மாதவிடாய்க் காலத்தின்போது மாதம் ஒரு முறை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மாநிலத்தில் உள்ள அரசாங்க அலுவலகங்கள், நெசவுத் தொழில்துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்ற தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் அது பொருந்தும்.

முதன்முதலில் சென்ற ஆண்டு (2024) கொள்கை முன்வைக்கப்பட்டது. அப்போது ஆண்டுக்கு ஆறு நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்போது அந்த விடுப்பு ஆண்டுக்கு 12 நாள்கள் என மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, 18 முதல் 52 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய கட்டாயம் விடுப்பு வழங்கப்படவேண்டும். விடுப்பு எடுப்பதற்கு பெண்கள் எந்தவித மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அதேவேளை, ஒரு மாதத்தில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கவில்லையென்றால் அந்த விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து (2 நாட்களாக) எடுக்க முடியாது என கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.