மகளிருக்கு செம நியூஸ்! அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவச பயணம்..!

 
1

110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் விரிவுப்படுத்தப்படும் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத் திட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், “முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.

தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோரும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. இத்திட்டத்தின்கீழ் திருநரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.