ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டாம்..!
ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் புதிதாக புக் செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. இந்த நிலையில், டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும். 'வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

