மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இனி காலை உணவுத் திட்ட வரிசையில் 'மாலையிலும் சிற்றுண்டி'!

 
1 1

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிச் செய்யும் நோக்கில், மதியத்தில் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்ட செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

சத்துணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மதியம் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதலாக தினசரி மாலை நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாழைப் பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய மாலை சிற்றுண்டியாக, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' வழங்க வேண்டும் என, பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.