தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு..!!

 
1

புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மே 23ம் தேதியுடன் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட் களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையானது வரும் 2027ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறி எவரேனும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களைத் தயாரித்தாலோ, கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்றும், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.