மக்களுக்கு குட் நியூஸ்..! 30% வரை குறையும் தங்கம் விலை..!!

 
gold

 தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது,"மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் 30% வரை தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது,தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சவரனுக்கு ரூ.9,000 குறைந்துள்ளது. "கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதன் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கம் விலை குறைகிறது. போர் முடிந்த பின்னர் இறங்கிய வேகத்தில் தங்கம் விலை அதிகரிக்கும்" என அவர் கூறியுள்ளார்.